2016-01-23 14:11:00

இது இரக்கத்தின் காலம் - அருள்தரும் ஆண்டினை முழக்கமிட...


முனைவர் பட்டம் பெறுவதற்கு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரோஹித் வெமுலா (Rohith Vemula) என்ற மாணவர், சனவரி 17ம் தேதி, தற்கொலை செய்துகொண்டதால், இந்தியாவில், 'சாதிப் போர்' மீண்டும் ஒருமுறை துவங்கியுள்ளது. இந்த வேதனை நிகழ்வு, ஓர் உயர் கல்விக்கூடத்தில் நிகழ்ந்தது என்பது, சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. 'சாதி'யை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள், அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தாத இடமே இல்லை என்பதைத்தான், ரோஹித் அவர்களின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. இந்த மரணத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், அரசியல்வாதிகள் இளையோரை இலக்காக்கி, வேட்டையாடி வருவது, பெரும் வேதனையே! இறைவன் பெயரால் இயங்கிவரும் நிறுவனங்களும் 'சாதிய அரசியலில்' சிக்கித் தவிப்பதை நாம் அறிவோம். இத்தகையச் சூழலில், நற்செய்தியின் ஒரு சில வரிகள் நமக்குமுன் ஒரு சவாலை வைக்கின்றன:

"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்." (லூக்கா 4 18-19)

அருள்தரும் ஆண்டான இரக்கத்தின் சிறப்பு யூபிலி காலத்தில், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யும் பணியை நிறைவேற்ற, இறைவனின் ஆவியார் நம் ஒவ்வொருவரையும் தூண்டவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.