2016-01-23 15:46:00

அமெரிக்காவில் இருபது நூற்றாண்டுகளாக Zika நோய்க் கிருமி


சன.23,2016. அமெரிக்காவை இருபது நூற்றாண்டுகளாகப் பாதித்துவரும் கொசுக்களால் பரவும் Zika என்ற நோய், ஆப்ரிக்கா, ஆசியா, மற்றும் பசிபிக் நாடுகளிலும் பரவி வருவதாக, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரேசில், கொலம்பியா, எல் சால்வதோர், பானமா மற்றும் கேப் வெர்தே நாடுகளில் Zika நோய்க் கிருமிகள் பரவி வருவதாக, ஜெனீவாவில் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த WHO பேச்சாளர் Christian Lindmeier அவர்கள், பிரேசிலில் 20 மாநிலங்களில் இந்நோயால் தாக்கப்பட்டுள்ள மக்களில் 49 பேர் இறந்துள்ளனர் என்றும் கூறினார்.

2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அதிகமாகப் பரவிய இந்நோயைத் தடுப்பதற்கு WHO நிறுவனம் கடுமையாய் உழைத்து வருவதாகவும் Lindmeier அவர்கள் அறிவித்தார்.

கொசுக்களால் பரவும் Zika நோய்க் கிருமி, டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் மற்றும் சிக்கன்குன்யா காய்ச்சலைப் பரப்புகிறது என்று WHO நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் 2015ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 4 ஆயிரத்து 484 பேரும், இந்தியா முழுவதும் மலேரியா காய்ச்சலால் 17 இலட்சத்து 24 ஆயிரத்து 561 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.