2016-01-22 16:17:00

யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நாள்


சன.22,2016. ஒவ்வொரு மனிதரின் மாண்பு இன்னும் அதிகமாய் மதிக்கப்படுவதற்கு, யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நாள் உலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.  

ஐரோப்பாவில் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் என்ற OSCE அமைப்பின் நிரந்தர அவையில் உரையாற்றிய, அந்த அமைப்புக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேரருள்திரு Janusz Urbańczyk அவர்கள், மனிதரின் மாண்பு இன்னும் அதிகமாய் மதிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

அனைத்து மனிதரும் ஒரே பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை நாம் ஏற்காவிட்டால், நமக்கு அடுத்து வாழ்பவரோடும், அந்நியரோடும் ஒன்றிணைந்து நாம் வாழாவிட்டால், மனிதமற்ற ஒரு நிலை நமக்காகக் காத்திருக்கின்றது என்பதை நினைவுபடுத்தினார் பேரருள்திரு Urbańczyk.  

யூத இன ஒழிப்பு நடவடிக்கையில், இலட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் இவ்வேளையில், இந்த எதார்த்தத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் கூறினார் பேரருள்திரு Urbańczyk.

இரண்டாம் உலகப் போரின்போது Auschwitz-Birkenau வதைமுகாமிலிருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நாளான சனவரி 27ம் தேதி, யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.