பூனைகள் ஒருநாள் கூட்டம் போட்டன. அது ஒரு பிரார்த்தனைக் கூட்டமாகவும் இருந்தது.
இந்தப் பூனைகள் கூட்டத்தில், ஒரு பூனை துணிச்சலுடன் எழுந்து சொன்னது,“சகோதரர்களே, எவ்வித சந்தேகமும் இல்லாமல் இறைவனை மீண்டும் மீ்ண்டும் வேண்டினால் நிச்சயமாக சுண்டெலிகள் மழையாகக் கொட்டும்” என்று.
இதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த நாய், தனக்குள்ளே சிரித்துக்கொண்டு, ஒரு பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தது, “அறிவு கெட்ட குருட்டுப் பூனைகளே! எனக்குத் தெரிந்தவரையும், என் மூதாதையர்களுக்குத் தெரிந்தவரையும், பிரார்த்தனை மூலமும், வழிபாடுகள் மூலமும் சுண்டெலிகள் மழையாகப் பொழியாது, மாறாக, எலும்புகள்தான் மழையாகப் பொழியும்' என்று.
கலீல் ஜிப்ரானின் இந்த தத்துவக் கதை ஒவ்வொருவரின் உலகத்தையும் அதில் அவர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துரைக்கிறது. அதிக ஆசைப்பட்டு அலைந்தோமானால், அருகிலிருக்கும் ஆபத்தை கவனிக்காமல் விட்டு விடுவோம். பிறர்மீது அக்கறையோடு வாழும்போது, அதிக ஆசைகள் நமக்கெனப் பிறப்பதில்லை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |