2016-01-22 16:28:00

3 அருளாளர்கள், 7 இறையடியார்கள் குறித்த விபரங்கள் ஏற்பு


சன.22,2016. மூன்று அருளாளர்களை, புனிதர்கள் என அறிவிக்கவும் மற்றும், மறைசாட்சிகள், இறையடியார்கள், வீரத்துவமான வாழ்வு வாழ்ந்தவர்கள் என, ஏழு பேரை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தவும் உதவும் விபரங்களை இவ்வியாழன் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்தார் திருப்பீட புனிதர் நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ ஆமாத்தோ.

அருளாளர்கள் Stanislao di Gesù Maria, Giuseppe Gabriele del Rosario Brochero, Giuseppe Sánchez del Río, ஆகிய மூவரின் பரிந்துரைகளால் புதுமைகள் நடந்துள்ளன. பொதுநிலை விசுவாசியான அருளாளர் Giuseppe Sánchez del Río அவர்கள், 1928ம் ஆண்டில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

இன்னும், 1936ம் ஆண்டில் அருள்பணியாளர் Gennaro Fueyo Castañón அவர்களுடன் மூன்று பொதுநிலை விசுவாசிகளும், 1945ம் ஆண்டில் Mariannhill மறைப்பணியாளர் சபையின் அருள்பணியாளர் Engelmar Unzeitig அவர்களும், 1615ம் ஆண்டில் பொதுநிலை விசுவாசி Giusto Takayama Ukon அவர்களும் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள்.

திரு இதயங்களின் சகோதரிகள் சபையைத் தோற்றுவித்த அருள்பணியாளர் Francesco Maria Greco, புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்த கைம்பெண் Elisabetta Sanna ஆகிய இருவரின் பரிந்துரைகளால் புதுமைகள் நடந்துள்ளன.

புனித மரியா நல்லாலோசனை சபையை ஆரம்பித்த கப்புச்சின் அருள்பணியாளர் Arsenio da Trigolo, புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்தவரும், திருச்சிலுவை ஆராதனை அமைப்பை ஆரம்பித்தவருமான Maria Luisa del Santissimo Sacramento ஆகிய இரு இரையடியார்களின் வீரத்துவமான வாழ்வு விபரங்களையும் திருத்தந்தை ஏர்றுக்கொண்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.