2016-01-21 16:16:00

வாஷிங்டனில் கருக்கலைப்பிற்கு எதிராக திருவிழிப்பு வழிபாடு


சன.21,2016. சனவரி 21, 22 ஆகிய இரு நாட்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள அமல அன்னை மரியா பசிலிக்காவில் கருக்கலைப்பிற்கு எதிராக, திருவிழிப்பு வழிபாடு நடைபெறும் என்று அமெரிக்க ஆயர்கள் அவை அறிவித்துள்ளது.

1973ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கின் இறுதியில், கருக்கலைப்பை சட்டமயமாக்கிய அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து, 43வது ஆண்டாக நடத்தப்படும் இந்த முயற்சியில் 20,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனவரி 21, இவ்வியாழன் மாலை துவங்கும் இந்த முயற்சியில், ஒப்புரவு அருள் அடையாளம், செபமாலை ஆகியவை இடம்பெறும் என்றும், இம்முயற்சிகள், வெள்ளி காலை நடைபெறும் திருப்பலியுடன் நிறைவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனவரி 16 முதல், 24ம் தேதி முடிய, வாழ்வுக்கு ஆதாரம் என்ற அமைப்பினர் மேற்கொள்ளும் ஊர்வலங்கள், மற்றும் கருக்கலைப்பிற்கு எதிரான ஏனைய முயற்சிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களில் நடைபெறுகின்றன என்றும் அமெரிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.