2016-01-20 16:12:00

நீதியுடன் செயலாற்றும் நிறுவனங்களுக்கே வத்திக்கான் ஆதரவு


சன.20,2016. வத்திக்கான் தன் பயன்பாட்டிற்கென பொருள்களை வாங்கும்போது, அப்பொருள்களை உருவாக்கும் தொழிற்சாலைகளில், தொழிலாளர்களின் நலனைப் பேணி, நீதியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை திருப்பீடம் உறுதி செய்த பின்னரே, பொருள்கள் வாங்கப்படும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீடத்தின் பொருளாதாரப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் ஜார்ஜ் பெல் (George Pell) அவர்கள், உலகளாவிய அறக்கட்டளை என்று பொருள்படும் The Global Foundation என்ற ஆஸ்திரேலிய நிறுவனத்தில், அண்மையில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

நவீன அடிமைத் தனத்தை ஒழிக்கும் ஒரு முயற்சியாக, வத்திக்கான் மேற்கொள்ளும் இந்த நிலைப்பாடு, ஏனைய நிறுவனங்களுக்கும் ஓர் உந்து சக்தியாக விளங்கும் என்று தான் நம்புவதாக, கர்தினால் பெல் அவர்கள் எடுத்துரைத்தார்.

கர்தினால் பெல் அவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், Carrefour, Barilla, Nestle ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் அமைப்புக்களில், அடிமைத்தன வற்புறுத்தலின் பேரில் தொழில் முறைகள் அமைவதை முற்றிலும் களைவதாக உறுதி மொழி எடுத்துள்ளன.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.