2016-01-19 15:32:00

உலக பழ உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்


சன.19,2016. உலக அளவில் பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா 2வது இடத்தைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பழ உற்பத்தியில், சீனா முதலிடத்தைக் கொண்டுள்ளவேளை, இந்தியா தற்போது, உலக அளவில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளதாக, இந்திய மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள 2015ம் ஆண்டிற்கான விவசாய புள்ளிவிபரம் அடங்கிய கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பழ ஏற்றுமதியில், அதிகபட்சமாக திராட்சைப்பழ ஏற்றுமதி ரூ.1,086 கோடி அளவில் 107.3 ஆயிரம் டன்களை எட்டியுள்ளது எனவும், இப்பட்டியலில் அடுத்தடுத்து, முறையே பிரேசில், அமெரிக்கா மற்றும் இஸ்பெயின் நாடுகள் வகிக்கின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.