2016-01-18 16:06:00

இரக்கத்தின் அப்போஸ்தலிக்க மாநாடுகள்


சன.18,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டில் நடைபெறும் இரக்கத்தின் அப்போஸ்தலிக்க மாநாடுகள் குறித்த விபரங்கள் இத்திங்களன்று வத்திக்கானில் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

இரக்கத்தின் ஐரோப்பிய அப்போஸ்தலிக்க மாநாடு, உரோம் நகரில் வருகிற மார்ச் 31ம் தேதி முதல், ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும். இரக்கத்தின் உலக அப்போஸ்தலிக்க மாநாடு, பிலிப்பீன்ஸின் மனிலாவில், 2017ம் ஆண்டு சனவரி 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும்

WACOM என்ற, இரக்கத்தின் உலக அப்போஸ்தலிக்க மாநாட்டுக் குழுவின் தலைவரான வியன்னா கர்தினால் Christoph Schoenborn, நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella ஆகியோர் அடங்கிய குழு இச்செய்தியாளர் கூட்டத்தில் இவ்விபரங்களை வெளியிடப்பட்டது.

மேலும், வருகிற புதனன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு டெக்சஸ் மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் Richard Allen Masterson அவர்கள் பற்றி திருத்தந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் கர்தினால் Schoenborn.

Richard அவர்கள் 12 ஆண்டுகளாக மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.