2016-01-16 15:03:00

இஞ்ஞாயிறன்று யூதத் தொழுகைக் கூடம் செல்கிறார் திருத்தந்தை


சன.16,2016. சனவரி 17, இஞ்ஞாயிறன்று, உரோம் நகரில் உள்ள யூதத் தொழுகைக் கூடத்திற்குச் செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கத்தோலிக்க-யூத நல்லுறவை வளர்க்கும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் துவக்கத்தில் இச்சந்திப்பை மேற்கொள்வது முக்கியத்துவம் நிறைந்தது என இருதரப்பிலுமுள்ள தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் என்று திருஅவை ஒவ்வோர் ஆண்டும்  கொண்டாடும், சிறப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, யூத தினம் என்ற ஒரு நாளை, இத்தாலிய ஆயர் பேரவை கொண்டாடவிருப்பதும், வேறு பல ஆயர் பேரவைகள் இந்த நாளைக் கொண்டாட விருப்பம் தெரிவித்திருப்பதும் இங்கு கறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவம் அல்லாத மதங்களுடன் கத்தோலிக்கத் திருஅவைக்கு உள்ள தொடர்பை விளக்கும் Nostra Aetate என்ற அறிக்கையை, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்கள் வெளியிட்டதன் பொன்விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.