2016-01-14 15:34:00

ஒற்றுமையை வளர்க்க கிறிஸ்தவக் கல்வி அவசியம்


சன.14,2016. பல்வேறு பாகுபாடுகளால் துயருறும் மத்தியக் கிழக்குப் பகுதியில், ஒற்றுமையை வளர்க்க கிறிஸ்தவக் கல்வி அயராது பாடுபட்டு வருகிறது என்று, ஜோர்டன் நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

கத்தோலிக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர் Maroun Lahham அவர்கள், எதிர்காலத்தின் நம்பிக்கை நம் கல்விக் கூடங்களில் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பாகுபாடுகளையும், வெறுப்புணர்வையும் இளையோர் மனங்களில் விதைத்துவரும் பல்வேறு தீயச் சக்திகளுக்கு ஒரு மாற்று மருந்தாக, கிறிஸ்தவக் கல்விக்கூடங்களும், குறிப்பாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் விளங்கவேண்டும் என்று பேராயர் Lahham அவர்கள் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய இளையோரிடையே உரையாடலை வளர்க்க நமது பள்ளிகளே தகுதியான இடங்கள் என்பதை மனதில் கொண்டு, மதங்களிடையே மதிப்பை வளர்க்கும் பண்புகளை நம் பள்ளிகள் இளையோர் உள்ளங்களில் ஆழ வேரூன்றும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று பேராயர் Lahham அவர்கள் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.