2016-01-14 15:45:00

அமெரிக்க ஆயர் பேரவையின் 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி


சன.14,2016. ஆப்ரிக்காவின் 18 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள 42 செயல் திட்டங்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

அருள் பணியாளர்கள் பயிற்சி, மறைக்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி, விவிலியக் கல்வித் திட்டங்கள், மற்றும் பல்வேறு  திட்டங்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கத் தலத்திருஅவையின் வளர்ச்சி, அனைத்துலக கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்கப்படும் ஒரு பரிசு என்று, இந்த நிதி உதவி பணிக்குழுவின் தலைவரான, கர்தினால் Theodore McCarrick அவர்கள் கூறினார்.

நிதி உதவி பெறும் உகாண்டா ஆயர்கள், இந்த நிதியின் உதவியோடு, இளையோரை தகுந்த தலைவர்களாக உருவாக்குவது தங்கள் பணிகளில் முதன்மையானது என்றும், 38 பங்குத் தளங்களில் தலைமைப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

எரித்ரியாவிலிருந்து தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள புலம் பெயர்ந்தோரின் மறுவாழ்வுக்கென, தங்களுக்கு வழங்கப்படும் நிதி பயன்படுத்தப்படும் என்று, எத்தியோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர். 

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.