2016-01-13 16:03:00

அமெரிக்க அரசு கருணையுடன் செயல்படவேண்டும் - ஆயர்கள்


சன.13,2015. தகுந்த ஆவணங்கள் ஏதுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள மத்திய அமெரிக்க மக்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு மீண்டும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பும் முயற்சிகளை மறுபரிசீலினை செய்யவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் அனுமதியின்றி நுழைந்துள்ள 121 மத்திய அமெரிக்க மக்கள், 2016ம் ஆண்டு துவங்கியதிலிருந்து, கடந்த 10 நாட்களாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் அன்னையர், மற்றும் குழந்தைகள் என்றும் பிதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

ஜார்ஜியா, டெக்சாஸ், மற்றும் வட காரோலினா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ள இம்மக்கள், எக்குற்றமும் இழைக்காதவர்கள் என்பதால், அவர்கள் மீது அரசு கருணையுடன் செயல்படவேண்டுமென்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆயர்களின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, Democratic கட்சியைச் சேர்ந்த 146 பிரிதிநிதிகள், அரசுத் தலைவர் ஒபாமா அவர்களுக்கு தங்கள் சார்பில் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர் என்று பிதேஸ் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.