2016-01-12 16:29:00

ஜெர்மனியில் குடியேற்றதாரரின் தாக்குதல்கள் தவறானவை


சன.12,2016. ஜெர்மனியில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் குடிபெயர்ந்தவர்களால் ஜெர்மன் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலியல் தாக்குதல்கள் எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாதவை என்று ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.

ஜெர்மனியின் Cologne பேராலயத்திற்கு வெளியே, புத்தாண்டைச் சிறப்பித்துக்கொண்டிருந்த இளம் பெண்களை, குடிபெயர்ந்தவர்கள் மனிதமற்ற முறையில் தாக்கியுள்ளனர் என்றுரைத்துள்ளார் ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவரும்,  Munich and Freising பேராயருமான கர்தினால் Reinhard Marx .

2015ம் ஆண்டில், 11 இலட்சம் குடிபெயர்ந்தவர்களை ஜெர்மனிக்குள் அனுமதித்த அந்நாட்டு சான்சிலர் Angela Merkel அவர்கள், இத்தாக்குதல்கள் குறித்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், ஜெர்மன் ஆயர் பேரவை இணையதளத்தில் இத்தாக்குதல்களுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் கர்தினால் Marx.

Cologne மற்றும் பிற முக்கிய நகரங்களில், குடிபெயர்ந்தவர்களை அதிகமாக வைத்திருப்பது ஜெர்மன் சமுதாயத்திற்கு தொல்லை கொடுக்கின்றது மற்றும் வருங்காலத்தில் மிகவும் விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Marx.

இதற்கிடையே, இம்மாதத் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் குடிபெயர்ந்தவர்களை ஆஸ்ட்ரியாவுக்கு அனுப்பி வருகிறது ஜெர்மனி.

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.