2016-01-09 15:24:00

சவுதி-ஈரான் குறித்து வளைகுடா நாடுகள் ரியாத்தில் கூட்டம்


சன.09,2016. சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள பதட்ட நிலை காரணமாக, வளைகுடா கூட்டுறவு பேரவையைச் சேர்ந்த 6 நாடுகளும் சவுதி தலைநகர் ரியாத்தில் கூட்டத்தைத் தொடங்கியுள்ளன.

ஒரு வாரத்துக்கு முன்னர் முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்தே, சுன்னி ஆதிக்க நாடான சவுதிக்கும் ஷியா ஆதிக்கம் கொண்ட ஈரானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

ஈரானுடன் தூதரக உறவுகளை முறித்துக்கொண்ட சவுதியின் நடவடிக்கையை வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் ஓர் உறுப்பு நாடு மட்டுமே பின்பற்றியுள்ளது.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.