2016-01-08 15:01:00

தென்கிழக்கு ஆசியாவில் ஒளிமயமாகத் தெரியும் இந்தியா


சன.08,2016. கடந்த 2015ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4 விழுக்காடு குறைந்துள்ளது, எனினும், இது இந்த 2016ம் ஆண்டில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, உலக வங்கியின் புதிய அறிக்கை கூறுகிறது.

அனைத்துலக பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கடந்த ஆண்டில், வளரும் நாடுகளில் பரவலாக காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலை, ஐ.நா.வின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி குறைவாக இடம்பெற்ற வளரும் நாடுகளில் உலகின் ஏழைகளில் நாற்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் என்றுரைத்த உலக வங்கித் தலைவர் Jim Yong Kim அவர்கள், வளரும் நாடுகள்  பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

எனினும், தென்கிழக்கு ஆசியாவில் ஒளிமயமாகத் தெரியும் இந்தியாவின் பொருளாதாரம், வரும் ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும் என்றும், உலக  அளவில் முக்கியப் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.

2016-17ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8 விழுக்காடாக இருக்கும், இது சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.