2016-01-06 15:19:00

கல்வி மறுக்கப்பட்டு வாழும் 28 இலட்சம் குழந்தைகள் JRS அறிக்கை


சன.06,2016. சிரியாவில் தொடர்ந்துவரும் போர்ச் சூழலால், ஏறத்தாழ 28 இலட்சம் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வாழ்கின்றனர் என்று இயேசு சபை புலம் பெயர்ந்தோர் பணி அமைப்பான JRS,  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

லெபனான் நாட்டில் Jbeil பகுதியில் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள JRS அமைப்பினர், லெபனான் நாட்டில் மட்டும் 5,50,000 குழந்தைகளுக்கு கல்வி தேவை என்று கூறியுள்ளது.

இப்பகுதியில் குழந்தைகள் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள JRS அமைப்பினர், அத்துடன் அமைதிக் கல்வியையும் சிறுவர், சிறுமியருக்கு வழங்கி வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

போர்க்களங்களின் கொடுமைகளை நேருக்கு நேர் பார்த்துள்ள இச்சிறுவர், சிறுமியர், வன்முறையை தங்கள் வாழ்வாக மாற்றிவிடக் கூடாது என்பதால், இவர்களுக்கு கல்வி மிக, மிக அவசியமான அவசரமான தேவையாக உள்ளது என்று இயேசு சபையினரின் JRS அமைப்பு தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.