2016-01-05 15:20:00

ஆப்ரிக்காவில் மிகப் பெரிய இயேசு திருவுருவம்


சன.05,2016. 2016ம் ஆண்டின் முதல் நாளில் மேற்கு ஆப்ரிக்காவில் மிகப் பெரிய இயேசு திருவுருவம் எழுப்பப்பட்டுள்ளது.

இத்திருவுருவம் பற்றிப் பேசிய நைஜீரியாவின் Orlu மறைமாவட்ட ஆயர் Augustin Tochukwu Okwuoma அவர்கள், இது கத்தோலிக்கரின் மாபெரும் விசுவாசத்தின் அடையாளம் மற்றும் ஆப்ரிக்காவிலே மிகப்பெரிய இயேசுவின் திருவுருவம் என்று கூறினார். இத்திருவுருவத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வணக்கம் செலுத்தினர் என்றும் ஆயர் தெரிவித்தார்.

நைஜீரியா நாட்டின் Abajahவில், “இயேசு மிகப்பெரியவர்” என்ற தலைப்பில் வெள்ளைப் பளிங்குக் கல்லில், வெறுங்காலுடன், விரிந்த கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள, மிகப் பெரிய இயேசு திருவுருவம், 8.53 மீட்டர் உயரத்தையும், 40 டன் எடையையும் கொண்டுள்ளது.

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான Imoவிலுள்ள Abajah கிறிஸ்தவ கிராமத்தில் புனித அலாய்சியஸ் கத்தோலிக்க ஆலயக் கோபுரத்தில் இத்திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்தை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தின் பொது இயக்குனரான 43 வயது Obinna Onuoha அவர்கள், இத்திருவுருவத்தை உருவாக்கும் பணியை சீன நிறுவனம் ஒன்றிடம் 2013ம் ஆண்டில் ஒப்படைத்தார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.