சன.04,2016. சிறுபான்மை சமூகங்கள் மீது சகிப்புத்தன்மையும், அவைகளுக்குப் பாதுகாப்பும் வழங்கும் இந்து சமுதாயத்தின் வளமையான பாரம்பரியம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் சீரோ மலங்கரா திருஅவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.
139வது மன்னம் ஜெயந்தி கொண்டாட்டங்களை Perunnaவிலுள்ள NSS தலைமையகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுவது முறைப்படுத்தபடுவதே, நாட்டின் நீண்ட காலப் பாரம்பரியத்தை, நவீன காலத்தில் கட்டிக்காப்பதற்கு உதவும் என்று கூறினார்.
சமுதாயத்தில் அதிகரித்துவரும் பிளவுகள் பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் கிளீமிஸ் அவர்கள், நாம் பேசுவதற்கு மட்டுமல்ல, நாம் நிலைத்து நிற்பதற்கும் இடம் தேவை என்றும், பன்முகத்தன்மையே மக்கள் ஒன்று சேர்ந்து நிற்பதற்கு உதவியுள்ளது என்றும் கூறினார். NSS அமைப்பின் சமய சார்பற்ற மற்றும் சனநாயகக் கோட்பாடுகளைப் பாராட்டிப் பேசிய கர்தினால், இந்த அமைப்பைத் தொடங்கிய Mannathu Padmanabhan அவர்களின் தொலைநோக்கு விழுமியங்கள் தொடர்ந்து காக்கப்படுமாறு வலியுறுத்தினார்.
ஆதாரம் : The Hindu /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |