2015-12-29 15:03:00

இந்திய அரசுப் பள்ளிகளில் அனைத்து மதங்கள் படிப்புக்கு அழைப்பு


டிச.29,2015. இந்தியாவில் கல்விப் பாடத்திட்டங்களில் இந்து மத மறைநூல் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கு அரசு முயற்சித்துவரும்வேளை, நாட்டின் அரசுப் பள்ளிகளில் அனைத்து மதங்கள் பற்றியும் படிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமாறு இந்திய கத்தோலிக்கத் திருஅவை அழைப்பு விடுத்துள்ளது.

விவிலியம், குரான் மற்றும் பிற மதங்களின் திருநூல்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

மேலும், கல்விப் பாடத்திட்டங்களில் அனைத்து மதங்களின் மறைநூல்களை இணைப்பது நன்மை பயக்கும் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்பணி Gyanprakash Topno அவர்கள் கூறினார்.

மாணவர்கள் ஒரு மதத்தின் புத்தகத்தோடு ஒட்டிக்கொள்வதைவிட அனைத்து மதங்களின் மறைநூல்கள் பற்றி கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார் அருள்பணி Gyanprakash.

ஹரியானாவில் அடுத்த கல்வியாண்டில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை கற்றுக்கொடுக்கப்படும் என்று பிஜேபி அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.