2015-12-28 16:18:00

கடுகு சிறுத்தாலும் – தேவைக்கேற்ப மாறும் இலட்சியங்கள்


ராஜா ஒரு சிறிய நிறுவனத்தில், மாதம் மூவாயிரம் ரூபாய் வருமானத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த ஆண்டு ஊரில் கடும் குளிர். அவரின் குடும்பத்தினருக்குப் சரியான கம்பளிப் போர்வைகள் இல்லை. அந்த மாதம் தனது ஊதியத்தில் 300 ரூபாயை போர்வை வாங்குவதற்காக ஒதுக்கி வைத்தார். ஆனால், அவரின் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே அந்தப் பணம் அம்மாவின் மருத்துவச் செலவில் கரைந்துபோனது. அதனால் அடுத்த ஆண்டு குளிர் காலத்துக்குள்ளாகப் பணம் சேர்த்து வைத்து கம்பளிப் போர்வை வாங்க நினைத்தார் ராஜா. அதற்காக நடந்தே அலுவலகம் சென்றார். தனது மற்ற சொந்தச் செலவுகளையும் குறைத்துக்கொண்டார். அந்த ஆண்டு சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு போர்வை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அன்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் சிம்னி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஏனெனில் மின்கட்டணம் செலுத்தாததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான். போர்வைக்காகச் சேர்த்து வைத்திருந்த தொகையைக் கொண்டு மின்கட்டணம் செலுத்தினார். கம்பளிப் போர்வை, கனவுப் போர்வையாகவே அந்த ஆண்டும் இருந்து விட்டது. ஆம். வாழ்வுக்கு இலட்சியங்கள் தேவை. ஆயினும், தேவைக்கேற்ப இலட்சியங்கள் மாறத்தான் செய்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.