2015-12-22 14:55:00

பிலிப்பைன்ஸ் உலக அழகி தூண்டுதலாய் இருப்பார், ஆயர்கள்


டிச.22,2015. 2015ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி, அந்நாட்டில் கடந்த வாரத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு தூண்டுதலாய் இருப்பார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர் பிலிப்பைன்ஸ் ஆயர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Las Vegas பகுதியில் இஞ்ஞாயிறன்று நடந்த 65வது உலக அழகிப் போட்டியின் இறுதி அலங்கார அணிவகுப்பில் உலக அழகிக்கான கிரீடம், 26 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் அவர்களுக்குச் சூட்டப்பட்டது

இது குறித்து கருத்து தெரிவித்த பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைப் பேச்சாளர் அருள்பணி ஜெரோம் செசிலானோ அவர்கள், பிலிப்பைன்ஸ் மக்கள், Melor புயலின் தாக்குதலால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர், இப்பெண்ணின் வெற்றி ஒரு தூண்டுதலாய் அமையட்டும் என்று கூறினார்.

அழகு என்பது, இதயமின்றி, அன்பின்றி ஒன்றுமில்லை என்பதே உலக அழகி உர்ட்ஸ்பட்ச் தெரிவிக்கும் செய்தி என்பதை பிலிப்பைன்ஸ் மக்கள் உணர்வது முக்கியம் என்றும் அருள்பணி செசிலானோ அவர்கள் தெரிவித்தார்.

உலக அழகி போட்டியில் மிஸ் கொலம்பியா அரியட்னா குடியர்ரெஸ் இரண்டாவது இடத்தையும், மிஸ் யுனிவர்ஸ் யு.எஸ்.ஏ ஒலிவியா ஜோர்டான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.