2015-12-22 15:08:00

2015ம் ஆண்டில் ஐரோப்பாவில் பத்து இலட்சம் குடிபெயர்ந்தவர்


டிச.22,2015. 2015ம் ஆண்டில் நிலம் மற்றும் கடல் வழியாக ஐரோப்பாவில் நுழைந்துள்ள குடிபெயர்ந்தவர் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கு அதிகமாகியுள்ளது, இவ்வெண்ணிக்கை 2014ம் ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம் என்று IOM என்ற அனைத்துலக குடிபெயர்ந்தவர் நிறுவனம் அறிவித்தது.

கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டவர்களில் எட்டு இலட்சத்திற்கு அதிகமான மக்கள், துருக்கியிலிருந்து கிரேக்க நாடு சென்றவர்கள், இவர்கள் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது

IOM நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இத்திங்கள் வரை, 10,05,504 பேர், கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, இஸ்பெயின், மால்ட்டா, சைப்ரஸ் ஆகிய ஆறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நுழைந்துள்ளனர் என்று தெரிகிறது.

இப்படிப் பயணம் மேற்கொண்டபோது இவ்வாண்டில் 3,695 பேர் நீரில் மூழ்கியுள்ளனர் மற்றும் காணாமல் போயுள்ளனர். மேலும், 4,55,000 பேர் சிரியாவிலிருந்தும், 1,86,000க்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்துள்ளனர்.

மேலும், ஐ.நா.வின் கணிப்புப்படி, இவ்வாண்டில் உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஆறு கோடியைத் தாண்டும். 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.