2015-12-21 15:51:00

கடுகு சிறுத்தாலும் – தேவைக்கேற்ப ஆசைப்படு


அந்த வியாபாரி தொட்ட காரியம் எல்லாம் துலங்காமலே இருந்தது. மனம் சோர்வடைந்த அவர் ஒருநாள், ஒரு கப்பல் நிறைய பனைவெல்லத்தை நிரப்பிக்கொண்டு ஒரு தீவுக்குச் சென்றார். அங்கும் அவரது வியாபாரம் எடுபடவில்லை. சில நாள்கள் சென்று அத்தீவின் அரசர் அந்த வியாபாரி பற்றிக் கேள்விப்பட்டு அவரை அரண்மனைக்கு அழைத்தார். அரண்மனை மருத்துவர் பனைவெல்லத்தின் மருத்துவப் பயனை அரசருக்கு விவரித்தார். இதில் மகிழ்ந்துபோன அரசர் அந்த வியாபாரி கொண்டு வந்திருந்த ஐயாயிரம் மூட்டை பனைவெல்லத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கு விலையாக ஐம்பது மூட்டை பொன்னைக் கொடுத்தார். அதோடு தனது அரண்மனையில் ஓரிரு நாள்கள் விருந்தினராகத் தங்கிச் செல்லும்படியாகவும் கூறினார். வெற்றியுடன் ஊர் திரும்பிய அந்த வியாபாரியிடம் நடந்ததைக் கேட்டறிந்த மற்றொரு வியாபாரி, ஒரு கப்பலில் சில்லுக் கருப்பட்டியை ஏற்றிக்கொண்டு அந்த அரசரிடம் சென்றார். சில்லுக் கருப்பட்டியைச் சுவைத்து மகிழ்ந்த அரசர், அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். அதற்கு அந்த வியாபாரி, அரசே, இந்த அரண்மனையில் நீங்கள் எதை அதிகம் மதிக்கிறீர்களோ அதையே கொடுங்கள் என்றார். சிறிதுநேரம் சிந்தித்த அரசர், அவருக்கு ஐம்பது மூட்டை பனைவெல்லத்தைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஆசைப்படுவதற்கும் ஓர் அளவு உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.