2015-12-10 14:49:00

கடுகு சிறுத்தாலும் – இரக்க குணம் புரிந்துகொள்ளப்படட்டும்


அந்த மனிதர் மிகுந்த இரக்க குணம் கொண்டவர். தன்னிடமிருப்பதையெல்லாம் பிறருக்கு வாரி வழங்குவதில் அவருக்கு ஒரு திருப்தி. கேட்டால்தான் தர வேண்டுமா? கேட்காமலே தருவதுதானே நன்கொடை என நினைத்தார். எனவே ஒருநாள் விதவிதமான பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு கடைவீதியில் அமர்ந்தார். ‘பழம் தேவைப்படுபவர்கள் வாருங்கள். இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளுங்கள்’என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். ஆனால் ஒருவர் கூட வரவில்லை. ‘இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ’என்றும், பழம் விற்கிற விலையில் இலவசமாய் யாராவது பழம் தருவார்களா என்றும் ‘சுவையிருக்காதோ’ என்றும், விஷப்பழமோ என்றும் மக்கள் கூடிக்கூடிப் பேசி விலகிச் சென்றனர். மாலையில் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தார் அந்த மனிதர். அவர் சென்ற பின்னர் பலரும் அந்தப் பழங்களைப் பொறுக்கிக் கொண்டனர்.

இலவசங்களுக்கு வாக்குச் சீட்டுகளை விலைபோக வைக்கும் மனிதர்களுக்கு உண்மையான இலவசங்களின் மதிப்புத் தெரிவதில்லை. இரக்க குணம் சிலநேரங்களில் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.