2015-12-05 15:17:00

மண்வளத்தைப் பாதுக்காக்க ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


டிச.05,2015. நகரங்கள் விரிவடைதல், காடுகள் அழிப்பு, நிலத்தை அக்கறையின்றி நிர்வகிக்கும் முறைகள், மாசுக்கேடு, காலநிலை மாற்றம், மண் சுரண்டல் போன்றவைகளால் தற்போது மண்வளம் அதிகம் பாதிப்படைந்துள்ளது, இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுள்ளார்.

உலக மண்கள் ஆண்டை நிறைவுக்குக் கொணரும் மற்றும் 2வது உலக மண் நாளைக் குறிக்கும் விதமாக இவ்வெள்ளியன்று செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், உலக மண்களில் 33 விழுக்காடு வளம் ஏற்கனவே குன்றியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

மேலும், உலக மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 60 விழுக்காடு அதிகரிக்கும், இம்மக்களுக்குத் தேவையான உணவு வழங்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

டிசம்பர் 05, உலக மண் நாளாகும். 2015ம் ஆண்டு உலக மண்கள் ஆண்டாகும்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.