2015-12-04 15:57:00

எய்ட்ஸ் நோயாளிகளிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டுகோள்


டிச.04,2015. HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை ஒதுக்கி வைக்காமல், பிறரன்பு மற்றும் கருணையுடன் நடந்துகொள்ளுமாறு, SECAM எனப்படும் ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

தாயின் கருவறை முதல், இயற்கையான மரணம் அடையும் வரை மனித வாழ்வு புனிதமானது என்ற கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையை நினைவுபடுத்தியுள்ள ஆயர்கள், வாழ்வின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளனர்.

உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி செய்தி வழங்கிய SECAM கூட்டமைப்பு, இந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கும், இந்நோய் தொடர்புடைய மரணங்களைத் தடுப்பதற்கும் உலக சமுதாயத்துடன் ஒத்துழைப்பு வழங்கவும் உறுதி தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டு ஜூலை 29 முதல் 2016ம் ஆண்டு ஜூலை 29 வரை ஆப்ரிக்க ஒப்புரவு ஆண்டை அறிவித்துள்ள ஆப்ரிக்க ஆயர்கள், இந்த ஒப்புரவு ஆண்டில் இடம்பெறும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில் எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிப்பதற்கும், அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள கறையை அகற்றுவதற்கும் உறுதி செய்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.