2015-11-30 14:53:00

கடுகு சிறுத்தாலும் – தூய மனத்தோடு செய்யும் செயலுக்கே பலன்


தெய்வ பயம் நிறைந்த தந்தை ஒருவர் தன் மகனை சிறு வயதிலிருந்தே பக்தி வாழ்வில் வளர்க்க விரும்பினார். தினமும் காலை நேர ஆராதனைக்கும் தன் மகனை அழைத்துச் செல்வார். கடவுளுக்கு காணிக்கை கொடுக்கும் நற்பழக்கத்தையும் உருவாக்க விரும்பிய தந்தை, ஒருநாள் அவனிடம் ஒரு ரூபாய் நாணயத்தையும் பத்து காசையும் கொடுத்து உனக்கு இவற்றில் எதைக் காணிக்கை போட விருப்பமோ அதைப் போடு என்று சொன்னார். தனது மகன் நிச்சயமாய் ஒரு ரூபாயைப் போடுவான் என்று எதிர்பார்த்தார் தந்தை. ஆனால் அன்று உண்டியல் பிரிக்க வந்தபோது பத்து காசை மகன் போட்டதைப் பார்த்தார் தந்தை. ஆராதனை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில், ஆர்வமற்ற தொனியில், மகனே உயர்ந்த கோட்பாடுகளைத்தானே உனக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறேன், அப்படியிருக்க அந்த ஒரு ரூபாயை உண்டியலில் போடுவதற்கு உனக்கு மனம் வரவில்லையா என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன், அப்பா, மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் காணிக்கையைத்தான் கடவுள் ஏற்பார் என்று இன்று போதகர் மறையுரையில் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்னால் பத்து காசைத்தான் மனமகிழ்ச்சியோடு கொடுக்க முடிந்தது, ஒரு ரூபாயை அல்ல என்றான். உள்ளத்தால் ஒன்றித்து செய்யாத எந்த ஒரு செயலுக்கும் பலனே கிடையாது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.