2015-11-27 16:28:00

கடுகு சிறுத்தாலும் – சொந்த சுமையை மட்டுமே சுமப்பதால் தனிமை


எண்பத்தைந்து வயதான ஒரு பெண்மணி, அவரது பிறந்த நாளன்று ஒரு நேர்முகப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது பேட்டியெடுத்த அந்தப் பத்திரிகை நிருபர் அப்பெண்ணிடம், உங்கள் வயதையொத்த மக்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். “நல்லது, எங்கள் வயதில், எங்களது சாதனை மற்றும் ஆற்றல்களையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை எல்லாம் வற்றிவிடும் என்பது மிகவும் முக்கியமான விடயம். மக்களுடன் கூட இருப்பது மிகவும் அவசியம். முடியுமென்றால் வேலை செய்து பணம் சேர்ப்பதும் மிகவும் முக்கியமாகும். அதுதான் எனது வயதையொத்தவர்களை உயிருடனும், நலமுடனும் வைத்திருக்கின்றது” என்று அந்த வயதான பெண் சொன்னார். சரி, உங்களது இந்த எண்பத்தைந்து வயதில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று நான் கேட்கலாமா? என்று அந்த நிருபர் கேட்க, அதுவா, நான் எனது வீட்டிற்குப் பக்கத்திலிருக்கின்ற ஒரு வயதான பெண்மணியை கவனித்துக் கொள்கிறேன் என்றார் அந்த மூதாட்டி. இந்த எதிர்பாராத பதிலில் மகிழ்ச்சியடைந்த அந்த நிருபர், வயதானவர்கள் தங்களின் சொந்த சுமையை மட்டுமே சுமப்பதினால்தான் அவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்டார். ஆம்.  அன்பு அதைப் பெறுகிறவர்களையும், அதைக் கொடுக்கிறவர்களையும் என, எல்லாரையும் குணப்படுத்துகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.