2015-11-16 16:01:00

லூத்தரன் கிறிஸ்தவ சபை திருத்தந்தைக்கு நன்றி


நவ.16,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்திற்குச் சென்றது, கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலைக் கற்பிப்பதாய் அமைந்துள்ளது என்று அக்கிறிஸ்தவ சபையினர் இத்திங்களன்று வெளியிட்ட நன்றி அறிக்கை கூறுகிறது.

இத்தாலியிலுள்ள லூத்தரன் கிறிஸ்தவ சபையினர் அனைவரும் திருத்தந்தையின் இச்சந்திப்பு குறித்து மகிழ்கின்றனர் என்றும், இது ஓர் உடன்பிறப்பு உணர்வு சூழலில் இடம்பெற்றது என்றும், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்கு உரையாடலும் செபமும் இரு முக்கிய கூறுகள் என்பதை உணர்த்தியது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை மேய்ப்பர் Jens-Martin Kruse அவர்கள், பாரிசில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களை இச்சந்திப்பில் நினைவுகூர்ந்து செபித்தது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

லூத்தரின் சீர்திருத்தம் ஏற்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.