2015-11-13 16:51:00

பிலிப்பைன்சில் 70% கார்பனைக் குறைப்பதற்கு ஆயர்கள் ஆதரவு


நவ.13,2015. பிலிப்பைன்சில் தேசிய அளவில் கார்பன் வெளியேற்றத்தை 2030ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய எழுபது விழுக்காடு குறைப்பதற்கு முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசு  விளக்கமளிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரட்டீஸ் வியேகாஸ்.

பிலிப்பைன்சில், தேசிய அளவில், கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு அந்நாட்டின் தேசிய பருவநிலை பணிக்குழு எடுத்திருக்கும் தீர்மானத்திற்கு, அந்நாட்டின் கத்தோலிக்கர் ஆதரவளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்  பேராயர் வியேகாஸ்.  

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய ஒன்றியமும் 26 முதல் 40 விழுக்காடு வரை கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு உறுதியளித்துள்ளவேளை, பிலிப்பைன்ஸ் 70 விழுக்காடு வரை உறுதியளித்திருப்பது அதிகம் என்று கூறப்படுகின்றது.

பருவநிலை மாற்றம் குறித்த மூன்று நாள் மாநாட்டை 43 நாடுகள் மணிலாவில் நடத்தி வருகின்றன. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.