2015-11-09 15:27:00

பங்களாதேசில் 4 கத்தோலிக்க குடும்பங்கள் தாக்கப்பட்டுள்ளன‌


நவ.09,2015. பங்களாதேசின்  Panchagarh மாவட்டத்தில் பில்லி சூனியச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற பொய்க்குற்றச்சாட்டுடன், 4 கத்தோலிக்கக் குடும்பங்களின் வீடுகளை எரித்துள்ளது அந்நாடின் இஸ்லாமிய தீவிரவாத குழு ஒன்று.

வீடுகளில் இருந்தோரை, கொல்லும் நோக்குடன் வெளியே பூட்டிவிட்டு, இத்தீவிரவாதிகள் நெருப்பு வைத்துள்ளபோதிலும், அண்மை வீடுகளில் வசித்தோரின் உதவியால் கத்தோலிக்கர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

கத்தோலிக்கர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தியதைத் தொடர்ந்து, ஏழுபேர் மீது காவல்துறையில் வழக்குத் தொடர்ந்துள்ளபோதிலும், இதுவரை எவரும் கைதுச் செய்யப்படவில்லை. இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லாமல், இருதரப்பினருடனும் பேசி, இழப்பீட்டுத் தொகையுடன் இதனை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அப்பகுதியின் சமூகத் தலைவர் அறிவித்தார். 

Panchagarh மாவட்டத்தின் Karmarpara பகுதியில் வாழும் ஏறத்தாழ 300 கத்தோலிக்கர்களுக்கு பொறுப்பாக இருக்கும் அருள்பணி Prodip Marnadi அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான தற்காலிக உதவிகளை தலத்திருஅவை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.