2015-11-07 15:42:00

ஒரே பாலின உறவுகளை ஆதரிக்கும் வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டாம்


நவ.07,2015. உண்மையான குடும்பங்களைக் கட்டியெழுப்பும் விழுமியங்களை ஆதரிக்கும் வேட்பாளர்களை, ஹாங்காங் கத்தோலிக்கர்கள் ஆதரிக்க வேண்டுமென்று ஹாங்காங் கர்தினால் ஜான் டாங் ஹோன் (John Tong Hon) அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

நவம்பர் 6, இவ்வெள்ளியன்று ஹாங்காங் உயர் மறைமாவட்டம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், கர்தினால் டாங் ஹோன் அவர்கள், ஒரே பாலின உறவுகளை ஆதரிக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் ஆதரிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

'ஓரின சேர்க்கையாளர்களின் பெருமை' என்ற கருத்தில் நவம்பர் 7, இச்சனிக்கிழமை ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு பேரணியையொட்டி, கர்தினால் டாங் ஹோன் அவர்கள், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று, UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இதுவரை ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் தங்கள் மனசாட்சிக்கு உகந்த வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று மட்டுமே கத்தோலிக்கத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வந்துள்ளனர் என்றும், இதுவே, முதல் முறையாக, ஒரு குறிப்பிட்ட கருத்தை எதிர்த்து கத்தோலிக்கர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் UCAN செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.