2015-11-07 15:30:00

இவ்வாண்டு நொபெல் அமைதி விருது பெற்றோரை சந்தித்த திருத்தந்தை


நவ.07,2015. இவ்வாண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ள, துனிசியாவின்  “Quartetto”  என்ற அமைதி பேச்சுவார்த்தைகள் இயக்கத்தின் 4 தலைவர்களை, இச்சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

Mohamed Fadhel Mahfiudh, Abdessatar Ben Moussa, Wided Bouchamaoui, Houchine Abbassi  ஆகிய நான்கு தலைவர்களும், பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியைக் கொணர முடியும் என்ற நோக்கத்துடன், ஆப்ரிக்க நாடான துனிசியாவில், “Quartetto” என்ற அமைப்பை உருவாக்கி, செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், இச்சனிக்கிழமையன்று காலை, சீனக் குடியரசின் திருப்பீடத்திற்கான தூதர் திருத்தந்தையை சந்தித்து விடை பெற்றார். சீனக்குடியரசு எனப்படும் தாய்வானின் திருப்பீடத்திற்கான அரசியல் தூதராக 2008ம் ஆண்டு முதல் செயலாற்றி வந்துள்ள Larry Yu-yuan Wang அவர்கள், இசசனிக்கிழமை காலை திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து விடைபெற்றார்.

இதற்கிடையே, இவ்வெள்ளியன்று, Grenada நாட்டின் ஆளுனர் Cecile Ellen Fleurette La Grenade, அவர்கள், திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.