2015-11-05 14:24:00

புலம்பெயர்ந்து வாழும் வீரர்கள், ஒலிம்பிக்கில் போட்டியிடலாம்


நவ.05,2015. 2016ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், புலம்பெயர்ந்தோர் நிலையில் உள்ள தடகள வீரர்கள், ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அனைத்துலக ஒலிம்பிக் கழகம் அறிவித்துள்ளது.

இதுவரை, புலம்பெயர்ந்தோர் நிலையில் இருக்கும் தடகள வீரர்கள், அவர்கள் சொந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை என்பதால், அவர்களால் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் இருந்தது.

ஐ.நா மன்ற பொது அவையில் ஆற்றிய ஓர் உரையில், அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர், தாமஸ் பேக் அவர்கள், புதிய விதிகளின் கீழ் எந்தப் போட்டியாளர்கள் கலந்துகொள்ளத் தகுதி பெற்றவர்கள் என்பதை அடையாளம் காணுமாறு, உறுப்பு நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்தார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.