2015-11-05 14:16:00

'இன்றைய உலகில் திருஅவை' ஏட்டின் 50ம்ஆண்டு நிறைவு கொண்டாட்டம்


நவ.05,2015. இரண்டாம் வத்திக்கான் சங்கம், 1965ம் ஆண்டு வெளியிட்ட 'Gaudium et Spes', அதாவது, 'இன்றைய உலகில் திருஅவை' எனும் ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவை, திருப்பீடத்தின் நீதி அமைதி அவை, நவம்பர் 5,6 ஆகிய இரு நாட்கள் கொண்டாடுகிறது.

அண்மையில் வத்திக்கானில் நிறைவுற்ற உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்ற அதே அரங்கத்தில் நடத்தப்படும் இந்த நிறைவு விழா நிகழ்ச்சிகளில், நவம்பர் 5ம் தேதி, 'Gaudium et Spes' ஏட்டின் வரலாறு குறித்தும், நவம்பர் 6ம் தேதி, இந்த ஏட்டின் இன்றைய தாக்கங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

"Gaudium et Spes - மனித சமுதாயத்திற்கு இளைய தலைமுறையினரின் பணி" என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள இளையோர் பங்கேற்கின்றனர் என்றும், இக்கருத்தரங்கின் துவக்கத்தில், 'Gaudium et Spes' ஏடு, அவர்களிடம் ஓர் அடையாள முறையில் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'இன்றைய உலகில் திருஅவை' என்ற இந்த ஏட்டின் தொடர்ச்சியாக, இன்றைய உலகில் மனிதர்கள் பெரும் மதிப்பு, நாம் சந்தித்துவரும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, நற்செய்தி பரவுதலில் புதிய தொழில்நுட்பங்கள் விளைவிக்கும் தாக்கங்கள் ஆகிய கருத்துக்களில் விவாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.