2015-11-03 16:24:00

மெக்சிகோ பாராளுமன்றத்தில் திருத்தந்தையின் திருமடல்


நவ.03,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலின் கருத்துக்கள், நவம்பர் 4, இப்புதனன்று, மெக்சிகோ நாட்டின் பாராளுமன்றத்தில், வழங்கப்படுகின்றன.

மத சார்பற்ற மெக்சிகோ அரசின் வரலாற்றில், திருத்தந்தை ஒருவரின் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்படுவது இதுவே முதல் முறை என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

Monterrey உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Rogelio Cabrera López அவர்களும், துணை ஆயர், Juan Armando Pérez Talamantes அவர்களும் இத்திருமடலின் கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்கின்றனர்.

அக்டோபர், 15ம் தேதி, மெக்சிகோ பாராளுமன்றத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கொடுத்த வாக்கின்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறும், அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாரும் அழைப்பு விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.