2015-10-31 14:54:00

கடுகு சிறுத்தாலும் - நாமும் புனிதர்களே!


கனடா நாட்டில், 'Salt and Light' என்ற ஒரு தொலைக்காட்சி மையத்தை நடத்திவரும் அருள்பணியாளர் Thomas Rosica என்பவர், சென்ற ஆண்டு வெளியிட்ட ஓர் அழகிய நூல், John Paul II - A Saint for Canada, கனடா நாட்டிற்கான புனிதர் - இரண்டாம் ஜான்பால். இந்நூலின் அறிமுகப் பக்கங்களில் அவர் எழுதியுள்ள சில எண்ணங்கள், புனிதத்தைப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளன:

"ஒருவர் 'முத்திப்பேறு பெற்றவர்' என்றோ 'புனிதர்' என்றோ அறிவிக்கப்படும்போது, அப்பழுக்கற்ற உன்னதத்தைப் பற்றிய அறிவிப்பு அல்ல அது. அந்த மனிதர் எவ்விதக் குறையும், பாவமும் அற்றவர் என்ற அறிவிப்பு அல்ல...

முத்திப்பேறு பெற்றவராக, புனிதராக ஒருவர் அறிவிக்கப்படும்போது, அவர் கடவுளின் கருணையைச் சார்ந்து, அவருடன் வாழ்ந்தார்; கடவுளின் சக்தியை நம்பி, தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்; முடியாதது என்பதும், முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்; தன் பகைவர்களையும், தன்னைத் துன்புறுத்தியோரையும் மன்னித்து வாழ்ந்தார்; வன்முறைகள், தீமைகள் அவரைச் சூழ்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தார்; இறுதியில் அவர் இவ்வுலகம் விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச் சென்றார் என்பதே அந்த அறிவிப்பில் அடங்கியுள்ளது."

அருள்பணி Thomas Rosica அவர்கள் கூறியுள்ள இப்பண்புகள் பலவற்றையும் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தியவர்கள், புனிதர்கள். இப்பண்புகளில் நாம் வளரும்போது, நாமும் புனிதர்களே! முயன்று பார்ப்போமே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.