2015-10-29 16:54:00

கானடா ஆயர்கள் : புலம்பெயர்ந்தோரை வரவேற்பது நம் கடமை


கானடா ஆயர்கள் : புலம்பெயர்ந்தோரை வரவேற்பது கத்தோலிக்கரின் கடமை

 

அக்.29,2015. குடியேற்றதாரர்களை வரவேற்பதில் கானடா நாட்டின் அனைத்துக் கத்தோலிக்கர்களும் முன்வந்து சிறப்புச் சேவையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

குடியேற்றதாரர் குறித்த மேய்ப்புப் பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கானடா ஆயர்கள், உலகில் புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் இந்நாட்களில், புலம்பெயர்ந்தோரை வரவேற்பதை ஒரு கிறிஸ்தவக் கடமையாக கத்தோலிக்கர்கள் நோக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு கத்தோலிக்கக் குடும்பமும் ஓர் அகதி குடும்பத்தை தத்தெடுத்து, தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என விண்ணப்பித்துள்ள கானடா ஆயர்கள், புலம் பெயர்ந்தோர்க்கான சிறப்பு செபங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாமல், நம் கைகளையும் இதயத்தையும் குரலோடு இணைத்து, உறுதியான நடவடிக்கைகளாக நம் உதவிகள் மாறவேண்டும் எனவும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர் கானடா ஆயர்கள். 

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.