2015-10-24 16:09:00

பிரான்ஸ் சாலை விபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


அக்.24,2015. பிரான்ஸ் நாட்டின் தெற்கே பொர்தோவுக்கு அருகில் இடம்பெற்ற சாலை விபத்தில் இறந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தனது செபத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து பொர்தோ பேராயர் Jean-Pierre Ricard அவர்களுக்குத் தந்தி செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

தென் பிரான்சின் Gironda பகுதியில் லிபோர்ன் என்னும் இடத்தில் இவ்வெள்ளி ஒரு கனரக வாகனமும், ஒரு சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்தன. இதில் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பலர் வயதானவர்கள். 

பிரான்சில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான விபத்து இது என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் ப்ரெஞ்ச் அரசு எடுக்கும் என்று அந்நாட்டு அரசுத்தலைவர் Hollande, பிரதமர் Valls ஆகிய இருவரும் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.