2015-10-23 16:56:00

சீக்கியரின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு ஆயர் கண்டனம்


அக்.23,2015. சீக்கியரின் புனித நூல் அவமதிக்கப்பட்ட தகவல்கள் பரவிய பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் வன்முறை போராட்டங்கள் வலுத்துவரும் வேளை, அம்மாநிலத்தில் மக்கள் அமைதி காக்குமாறு பஞ்சாப் மாநில திருஅவை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

சீக்கியரின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஜலந்தர் ஆயர் Franco Mulakkal அவர்கள், மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் Bargadi கிராமத்தில் Guru Granth Sahib என்ற சீக்கியரின் புனித நூலின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு கிடந்தது இம்மாதம் 12ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் Faridkotல் போராட்டங்கள் தொடங்கின. ஆயினும், இம்மாதம் 17ம் தேதிக்குள் இப்புனித நூல் அவமதிக்கப்பட்ட நிகழ்வுகள் குறைந்தது நான்கு முறைகள் இடம்பெற்றுள்ளன.

இப்போராட்டதாரர்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் இருவர் இறந்துள்ளனர். அதன் பின்னர் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

சீக்கியர்கள் தன்னிலே ஆழமான ஆன்மீகம் கொண்டவர்கள், எல்லாருடனும் குறிப்பாக கிறிஸ்தவர்களுடன் நட்புடன் இருப்பவர்கள் என்றும் தலத்திருஅவை அதிகாரிகள் கூறினர்.

சீக்கிய மதம் பஞ்சாபில் 15ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு விவிலியம் போன்று, Guru Granth Sahib சீக்கியர்களுக்கு புனித நூலாகும்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.