2015-10-22 17:01:00

இந்திய சமயத் தலைவர்கள் நீர் வளங்களைப் பாதுகாக்க உறுதி


அக்.22,2015. உலகில், அளவிலும், தரத்திலும் அழிந்துவரும் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கு உறுதி எடுத்துள்ளனர் இந்திய சமயத் தலைவர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் சால்ட் லேக் நகரில், உலக மதங்களின் ஆறாவது பாராளுமன்ற கூட்டத்திற்காகக் கூடிய இந்திய சமயத் தலைவர்கள் இந்த உறுதியை எடுத்துள்ளனர்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் உலக மதங்களின் பாராளுமன்றத்திற்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, எண்பது நாடுகளின் ஐம்பது மத மரபுகளைக் கொண்ட ஏறக்குறைய பத்தாயிரம் பேர் இம்மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை சால்ட் மாளிகை அரங்கில் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் அவர்கள் இத்தீர்மானத்தை எடுத்தனர்.

மேலும், சுத்தமான தண்ணீர், நலவாழ்வு வசதிகள், போதுமான தண்ணீர் இல்லாமையால் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது மற்றும், இதனால் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1,800 சிறார் தினமும் இறக்கின்றனர். இந்தியாவில் இவ்வாறு இறக்கும் சிறாரின் எண்ணிக்கை 1,200 முதல் 1,600 வரை என்றும், நாட்டில் ஏறக்குறைய அறுபது கோடிப் பேருக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது என்றும் கூறப்பட்டது.

ஆதாரம் : ANI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.