2015-10-21 17:52:00

ராஞ்சி கத்தோலிக்க மருத்துவ கல்லூரி விரைவில்


அக்.21,2015. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் ராஞ்சியில் அமைக்கப்பட்டு வரும் கத்தோலிக்க மருத்துவ கல்லூரியின் தொடக்க விழா விரைவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் 7ம் தேதி இடம்பெறும் என்று எதிர்பார்பார்க்கப்படும் இவ்விழாவில் ஜார்கண்ட் முதலமைச்சர் Raghubar Das அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், இன்னும், இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களும், தலத்திருஅவையின் உயர்மட்டத் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

பூர்வீக இன மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பகுதியில் வருகிற நவம்பரில் செயல்பட ஆரம்பிக்கும் ராஞ்சியின் Mandarinல் மருத்துவமனையும், Constant Lievens மருத்துவக் கல்லூரியும் அம்மக்களுக்குப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

1885ம் ஆண்டில் ஜார்க்கண்ட் பகுதியில் கத்தோலிக்கத்தை வேரூன்றியவரும், சோட்டா-நாக்பூர் திருத்தூதர் என்று அழைக்கப்படுபவருமான இயேசு சபை அருள்பணி Constant Lievens அவர்களின் பெயர், இம்மருத்துவக் கல்லூரிக்குச் சூட்டப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டில் Jamshedpurல் நடைபெற்ற இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் இந்த மருத்துவமனை திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு முதல் Mandarல் திருக்குடும்ப மருத்துவமனை நடத்தும் மருத்துவப்பணி சகோதரிகள், இப்புதிய மருத்துவமனைக்கு ஒத்துழைப்பு தருவதற்கு இசைவு தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.