2015-10-21 17:35:00

14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் சிறு குழுக்கள்


அக்.21,2015. குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி வரைவுத் தொகுப்பு குறித்து கடந்த சில நாள்களாக, 13 சிறு குழுக்களாக, கருத்துப் பகிர்வுகளில் ஈடுபட்டிருந்த மாமன்றப் பிரதிநிதிகள், தங்களின் குழுக்கள் அறிக்கையை இச்செவ்வாய் மாலையில் சமர்ப்பித்தனர்.

இம்மாமன்றத்தின் சிறப்புக் குழு, அனைத்து சிறு குழுக்களின் பரிந்துரைகளை ஒன்றிணைத்து இறுதி அறிக்கை தயாரிப்பில் இப்புதனன்று ஈடுபட்டுள்ளன. இந்த இறுதி அறிக்கை வருகிற சனிக்கிழமையன்று மாமன்றத்தின் பொது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இச்செவ்வாய் பொது அமர்வில் முதலில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதி பேராயர் ஹிலாரியோன் அவர்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தார். ஒரே பாலின உறவுகளை ஆசிர்வதிக்கும் சில பிரிந்த சபை சமூகங்களைக் குறை கூறினார். 

மொழிவாரியான சிறு குழுக்களில் பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் இருந்தாலும் ஒருமித்த கருத்துக்களைக் கொண்டுவரும் வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.