2015-10-20 16:34:00

ஆதிகால மனிதரின் முதல் பயணம் ஆப்ரிக்காவிலிருந்து சீனாவுக்கு


அக்.20,2015. ஆதிகால மனிதர்கள் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தங்களின் முதல் பயணத்தை ஆப்ரிக்காவிலிருந்து சீனாவுக்கு மேற்கொண்டனர் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஏறக்குறைய அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆதிகால மனிதர்கள் தங்களின் முதல் பயணத்தை ஆப்ரிக்கக் கண்டத்திலிருந்து அண்மையிலுள்ள ஐரோப்பாவுக்கு மேற்கொண்டனர் என்று பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால பற்களை ஆய்வு செய்தபோது ஆதிகால மனிதர், முதலில் ஆப்ரிக்காவிலிருந்து சீனாவுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.   

தென் கிழக்குச் சீனாவின் Daoxianலுள்ள Fuyan குகையில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுகள் பழமையுடைய விலங்குகளின் எலும்புகளும் இக்குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : Christiantoday / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.