2015-10-19 16:16:00

ஆயிரக்கணக்கான புலம்பெயரும் மக்களை பிரிட்டன் ஏற்க வேண்டும்


அக்.19,2015. அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஐம்பதாயிரம் சிரியா நாட்டு குடிபெயர்வோரை பிரிட்டன் அரசு ஏற்க வேண்டும் என்று இங்கிலாந்து ஆங்லிக்கன் சபையின் எண்பதுக்கு மேற்பட்ட ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருபதாயிரம் சிரியா நாட்டு குடிபெயர்வோரை பிரிட்டன் அரசு ஏற்கும் என்று பிரிட்டன் பிரதமர் அறிவித்திருப்பது போதுமானதாக இல்லை என்று, துர்ஹாம் ஆங்லிக்கன் ஆயர் Paul Butler அவர்கள் தலைமையில் 84 ஆயர்கள் இணைந்து அரசுக்கு எழுதிய கடிதம் கூறுகிறது.

இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள புலம்பெயரும் மக்கள் பிரச்சனையில் தற்போதைய சிரியாவின் பிரச்சனையும் ஒன்றாக உள்ளது என்று, தற்போதைய நிலவரத்தை விளக்கியுள்ளனர் ஆயர்கள்.

ஈராக்கில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் கிறிஸ்தவமே இல்லாத நிலை உருவாகி விடும் என்று பிரிட்டன் பிறரன்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடிபெயரும் மக்கள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர் என்று இத்திங்கள் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : Christianglobe /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.