2015-10-17 16:12:00

தத்து எடுத்தல் குறித்த விதிமுறைகளை ஆய்வு செய்ய குழு


அக்.17,2015. இந்தியாவில் தத்து எடுத்தல் குறித்து அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் பற்றி ஆய்வு நடத்துவதற்கு வழக்கறிஞர்கள் குழு ஒன்றை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அமைத்துள்ளது.

தத்து எடுத்தல் குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் தொடர்பாக, அன்னை தெரேசா சபையினர் இந்தியாவில் நடத்தும் தத்து கொடுக்கும் மையங்களை மூடுவதற்கு முடிவு எடுத்துள்ளதை முன்னிட்டு, ஆயர் பேரவை வழக்கறிஞர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை நலவாழ்வு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள, தத்து எடுத்தல் குறித்த விதிமுறைகளில் சில மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்திய ஆயர் பேரவையின் சட்டம் மற்றும் பொதுநல பணிக்குழு கூறியுள்ளது.

இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த வழக்கறிஞர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

மரபுமுறைப்படி அமையாத குடும்பங்களுக்கும் குழந்தைகளைத் தத்து கொடுப்பதற்கு அரசின் விதிமுறைகள் வழி அமைக்கின்றன.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.