2015-10-14 16:24:00

கடுகு சிறுத்தாலும் – உழைத்துச் சேர்ப்பதே மனதிற்கு மகிழ்வு


ஒரு முறை ஒருவர் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரிடம் உதவி கேட்டுப் போனார். அச்செல்வந்தர், வந்தவரை இன்முகத்தோடு வரவேற்றார். விருந்தினர் அறையில் அமர வைத்து தேனீர் கொடுத்தார். பின்னர் அவரிடம் பல காரியங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய சொத்து விபரங்களையெல்லாம் கூறினார். தன்னுடைய தொழில்கள், நிலபுலன்கள், வசதி வாய்ப்புகள் என, எல்லாவற்றையும் பட்டியலிட்டார். பின்னர் உதவி கேட்டு வந்தவரை ஒவ்வோர் அறையாக அழைத்துச் சென்று காட்டினார். வீட்டின் பின்வாயில் வழியாக பழக்கடைக்கு அழைத்துச் சென்றார் செல்வந்தர். பின்னர் அச்செல்வந்தர், நான் உங்களிடம் காட்டிய அனைத்தையும், என் சொந்த உழைப்பால், யாரிடமும் ஒரு பைசாகூட வாங்காமல் சுயமாக உழைத்துச் சேர்த்தவை. எனவே நீங்களும் எதையும் யாரிடமும் இலவசமாக வாங்காமலும், எதிர்பார்க்காமலும் சுயமாக உழைத்து முன்னேறுகின்ற வழியைப் பாருங்கள் என்று கறாராகப் பேசி வழியனுப்பி வைத்தார்(அம்புலிமாமா கதை).

இலவசமாக எங்கு, எது கிடைக்கும் என்று ஏங்குபவர்கள் பலர் உண்டு. அப்படியே அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்தாலும், நிம்மதி அடைவதில்லை. ஆனால் சொந்த உழைப்பினால் கிடைக்கும் செல்வமே நிலைத்து நிற்பதுடன், மனதிற்கும் மகிழ்வைத் தரும்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.