2015-10-14 17:21:00

ஆயர்கள் மாமன்றம்:பெண்களின் பங்கு, ஒன்றிப்பில் பன்மை


அக்.14,2015. தங்களின் கருத்துக்கள் மதிக்கப்படுவது மட்டுமின்றி, அவை மாமன்றத்தின் விவாதங்களிலும் சேர்க்கப்படுகின்றன என்று, குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த மாமன்றம் குறித்து இச்செவ்வாயன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய, கானடா நாட்டு கத்தோலிக்க உயிரியல் அறநெறி நிறுவன இயக்குனர் திருமதி Moira McQueen, குடும்ப நலனுக்காக ஆப்ரிக்க கூட்டமைப்பில் பணியாற்றும் ருவாண்டா நாட்டு திருமதி Therese Nyirabukeye ஆகிய இருவரும் இவ்வாறு கூறினர்.

இம்மாமன்றப் பெண் பிரதிநிதிகள் தெரிவித்த பல கருத்துக்கள், இம்மாமன்றத்தின் அறிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளன என்றும், பெண்களின் பங்கு, ஒன்றிப்பில் பன்மை போன்றவை கலந்துரையாடல்களில் இடம்பெற்றன என்றும் இவர்கள் கூறினர்.

இன்னும், இச்செவ்வாயன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் அருள்பணி லொம்பார்தியுடன், புனித Ottilie பெனடிக்ட் ஆதினத் தலைவர் Jeremias Schroder அவர்களும் கலந்துகொண்டார். இன்றையக் குடும்பங்களிலிருந்து இறையழைப்பைத் தேர்ந்து கொள்பவர்க்குப் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து விளக்கினார் ஆதீனத் தலைவர் Schroder.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.