2015-10-13 16:39:00

மூச்சுத் தொடர்பான நோய்களுக்கு இந்தியர்கள் அதிகளவில் பாதிப்பு


அக்.13,2015. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 50களில் மற்றும் 60களிலும் வாழ்ந்தவர்களே, அதிலும் பெரும்பாலும் இவ்வயதுடைய ஆண்களே இதய நோயால் பாதிக்கப்பட்டனர், ஆனால் தற்போது ஆண்களும் பெண்களும் இருபது வயதுகளிலேயே இதய நோயால் தாக்கப்படுகின்றனர் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது

Global Burden of Disease Study என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில், இதயம் மற்றும் மூச்சு தொடர்பான நோய்களுக்குத்தான் அதிகமான இந்தியர்கள் பலியாகின்றனர் என தெரிய வந்துள்ளது.

1990களில் ஆய்வு நடத்தப்பட்டபோது, மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் போன்ற நோய்களால்தான் நிறைய பேர் இறந்தது தெரிந்தது. ஆனால் இக்காலத்தில் இதய நோய், மூச்சுக்குழாய் சுருக்கம் போன்ற நோய்களால் நிறைய பேர் இறக்கின்றனர் என்று அவ்வாய்வு கூறுகிறது.

வாழ்வியல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்குக் காரணம் என்றும், உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சத்து, சத்துக் குறைவான உணவு, மது, புகையிலை போன்றவற்றால் ஏற்படும் நோய்கள், கடந்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளன என்றும் அவ்வாய்வு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Indiatimes, தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.